Saturday, December 4, 2010

விஜயகுமாரை எதிர்த்து மனித உரிமை கமிஷனுக்குப் போவேன்!-வனிதா

தந்தை விஜயகுமார் என்மீது போட்டுள்ள பொய் வழக்கு, அவரும் குடும்பத்தினரும் விடுத்து வரும் கொலை மிரட்டல்கள் குறித்து மனித உரிமை கமிஷனில் புகார் செய்வேன் என்று வனிதா கூறினார்.

விஜயகுமார், வனிதா மோதல் தீவிரமாகியுள்ளது. வனிதா புகார் மீது நடிகர் அருண் விஜய் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து அவர் சென்னை திரும்பியதும் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் வனிதாவுக்கு கூறப்பட்டுள்ளது.

விஜயகுமார் புகார் மீது ஏற்கனவே வனிதா கணவர் கைது செய்யப்பட்டார். வனிதா மீதும் நடவடிக்கை எடுக்க முயற்சி நடந்தன. இதனால் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜயகுமார் வக்கீலும் போலீஸ் வக்கீலும் வனிதாவுக்கு முன் ஜாமீன் அளிக்க கூடாது என வற்புறுத்தினர். அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இன்னொரு புறம் வனிதா புகார் மீது விஜயகுமார், மஞ்சுளா மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயாராகி வருகிறார்கள். இருவரும் தற்போது ஹைதராபாத்தில் இருக்கின்றனர். சென்னை திரும்பியதும் விஜயகுமார் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

இதற்கிடையில் இருவருக்குமிடையில் சமரச முயற்சிகளும் நடக்கின்றன. ஆனால் வனிதாவோ வழக்கை வபஸ் பெற்றால்தான் சமரசம் பேச முடியும் என கூறிவிட்டார்.

இந்த விவகாரத்தை மனித உரிமை கமிஷனுக்கு எடுத்துச் செல்லவும் முடிவு செய்துள்ளார் வனிதா.

இதுகுறித்து வனிதா கூறுகையில், “அருண்விஜய் எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததை போலீஸ் கமிஷனர் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அருண் விஜய்க்கு தொடர்புள்ளவர்கள் பற்றிய விவரங்களை எல்லாம் போலீசாரிடம் சொல்லியுள்ளேன்.

விஜயகுமார் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை அவர் ஆதரவுக்கு பெரிய ஆட்களைப் பிடிக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அரசியலில் ஆள் பிடிக்கிறாரா வேறு துறைகளில் ஆள் பிடிக்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை.

ஒன்று மட்டும் உறுதி, என் பக்கம் நியாயம் இருக்கிறது. நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளியமாட்டேன். விஜயகுமாருக்காக பெரிய ஆட்களெல்லாம் ஒன்று சேருகிறார்களாம். அதற்காக எனக்கு பயம் இல்லை என்னை சீண்டி பார்த்தால் நானும் யார் என்று காட்டுவேன்.

மனித உரிமை அமைப்புகள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பெண்கள் அமைப்பினரும் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.

பொய் வழக்கு, கொலை மிரட்டல்கள் குறித்து மனித உரிமை கமிஷனில் புகார் செய்ய திட்டமிட்டுள்ளேன்…”என்றார்.

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york