ஷங்கரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்திலிருந்து நடிகர் விஜய் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
ஜெமினி நிறுவனம் தயாரிக்கவிருந்த ரீமேக் படம் இது. ஷங்கர் தனது கேரியரில் முதன்முதலில் இயக்கும் ரீமேக்கும் இதுவே.
தமிழில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது. தெலுங்கில் விஜய் வேடத்தில் மகேஷ்பாபு நடிப்பார் எனவும் அந்தப் படத்துக்கு தலைப்பு 3 ராஸ்கல்ஸ் என்றும் அறிவித்திருந்தனர்.
படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குவதாக இருந்த நிலையில், இந்த பரபரப்பு எழுந்துள்ளது.
விஜய் இப்போது நடித்துவரும் வேலாயுதம் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம். ஆனால் அதற்குள் 3இடியட்ஸை துவங்குவதில் ஷங்கர் உறுதியாக உள்ளாராம்.
வேலாயுதம் படம் முடியும் முன்பே 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதாம். எனவே இந்தப் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று விஜய் கூறிவிட்டதாகவும், ஷங்கரும் அவரும் நண்பர்களாகப் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்போது விஜய்க்கு பதில் புதிய நாயகனைத் தேடுகிறார்கள் ஷங்கரும் ஜெமினி நிறுவனத்தினரும்…
0 comments:
Post a Comment