ரம்லத் தொடர்ந்த இரு வழக்குகளில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் அனுப்பிய முதலிரு சம்மன்களையும் கண்டுகொள்ளாமல், விசாரணைக்கும் ஆஜராகாமல் புறக்கணித்து வரும் பிரபு தேவா – நயன்தாராவுக்கு மூன்றாவது சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த சம்மனை நீதிமன்ற பணியாளர் ஒருவர் மூலமும், தபால் மற்றும் கொரியர் மூலமும் அனுப்ப உத்தரவிட்டார் நீதிபதி.
ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள பிரபு தேவா, தனது கள்ள காதலி நயன்தாராவை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனை பிரபு தேவா மனைவி ரம்லத் எதிர்த்தார். குடும்ப நல நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடர்ந்தார். திருமணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்க கூடாது என்றும் மனுக்களில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கனவே இரண்டு முறை நயன்தாரா, பிரபு தேவாவுக்கு சம்மன் அனுப்பினார். முதல் சம்மன் திரும்பி வந்தது. இரண்டாவது சம்மனை தபாலில் அனுப்பினர். அதுவும் திரும்பியது.
இருவரும் சம்மனை வாங்காமல் நாடகம் ஆடுவதாக ரம்லத் தரப்பில் குற்றம் சாட்டினர். அவர்கள் சார்பில் வக்கீலும், ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கை இழுத்தடிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
3-வது சம்மனை கோர்ட்டு மூலமும் தபால், கொரியர் மூலமும் அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த சம்மன்கள் தற்போது அனுப்பப்பட்டு விட்டன. வழக்கு விசாரணை ஜனவரி 21-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் இருவரும் ஆஜராவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மூன்றாவது சம்மனை வாங்க மறுத்தால் பிறகு பத்திரிகைகளில் விளம்பரம் செய்து சம்மன் கொடுக்கப்படும் என்று ரம்லத் வக்கீல் ஆனந்தன் தெரிவித்தார்.
அப்படியும் வாங்க மறுத்தால், இருவரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இதற்கிடையில் நயன்தாரா, பிரபு தேவா இருவரும் துபாயில் குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு வீடு பார்த்து வருகிறார்களாம். நடன பள்ளி அமைக்கவும் முடிவு செய்துள்ளனராம். அங்கிருந்தபடியே படங்களை இயக்குவாராம் பிரபு தேவா.
அதேநேரம் ரம்லத் தனது மனைவியே அல்ல என்றும், அது மீடியா பரப்பி பொய் என்றும் நீதிமன்றத்தில் நிரூபிக்க மும்பை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம் பிரபு தேவா.
0 comments:
Post a Comment