ஹன்சிகாவை பிரபு தேவா காதலிப்பதாகவும், இருவரும் ஹோட்டலில் ஒன்றாக இருந்ததை கையும் களவுமாகப் பிடித்த நயன்தாரா, பிரபு தேவாவின் சட்டையைப் பிடித்து சண்டை போட்டார் என்றும் செய்திகள் வந்தன.
நயன்தாரா வந்ததும் அங்கிருந்து நைசாக நழுவப் பார்த்த ஹன்சிகாவை அடித்தார் நயன்தாரா என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டு இன்னும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த விவகாரம் குறித்து ஹன்சிகா இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கு இப்போதுதான் 19 வயசாகுது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர்.
பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்ற அளவில் அவரை நேசிக்கிறேன். எனக்கு அண்ணன் மாதிரின்னு கூட சொல்லலாம்.
நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவில்லை” என்றார்.
என்னமோ போங்க… இதுக்கெல்லாம் ‘ஐ விட்னஸா’ தேடிக்கிட்டிருக்க முடியும்!
0 comments:
Post a Comment