விஜய குமாரை வீழ்த்தும் குடும்ப ரகசியங்கள் என்னிடம் ஏராளம் உள்ளன. அவற்றை கடைசி ஆயுதமாகப் பிரயோகிக்கப் போகிறேன், என்றார் நடிகையும் அவர் மகளுமான வனிதா.
இனி சமாதானத்துக்கே இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா நேற்று மாலை 7 மணிக்கு திடீரென்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், “நான் கொடுத்த புகார் மனு மீது போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப் பதிவு மட்டும் செய்திருப்பதாக சொல்கிறார்கள். எனது தந்தை விஜயகுமாரும், தாயார் மஞ்சுளாவும், ஹைதராபாத் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். சகோதரர் அருண் விஜய் அமெரிக்காவுக்கு போய்விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது. தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்.
அவர்கள் அனைவரும் ஹைதராபாத்தில்தான் தங்கியிருக்கிறார்கள். எனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும்வரை நான் ஓயமாட்டேன். சாதாரண குடும்ப சண்டைதான் பெரிய மகாபாரத யுத்தமாக மாறிவிட்டது. அதுபோல்தான் எங்கள் குடும்ப சண்டையும், இப்போது போலீஸ் நிலையம், ஜெயில் வரை வந்துள்ளது. எனக்கு நியாயம் கிடைக்கும்வரை இந்த யுத்தம் ஓயாது.
பொய் வழக்கு….
குடும்ப ரகசியங்களை நான் வெளியிடுவேன் என்றதும், எனது தந்தைக்கு நெருக்கமாக உள்ள சிலர் எனக்கு போன் செய்து, ‘நீ அமைதியாக இரு, இல்லாவிட்டால் நீ தமிழ்நாட்டில் இருக்க முடியாது’ என்று சொல்லுகிறார்கள்.
அதையும் பார்க்கத்தான் போகிறேன். எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் கண்டிப்பாக குடும்ப ரகசியங்களை வெளியிடுவேன்.
எனக்கும் விஜயகுமாருக்கும் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது கணவர் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
நான் முதலில் எனது குழந்தையை மீட்டு தாருங்கள் என்றுதான் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள்தான் பொய் புகார் கொடுத்து எனது கணவரை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்கள். எனது குழந்தையை கழுத்தை பிடித்து நெரித்ததற்கும், என்னை காலால் எட்டி உதைத்து அருண் விஜய் அடாவடி செய்ததற்கும் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.
டெல்லி வரைக்கும் போவேன்…
நான் நடிகையாக இருந்தபோது வாங்கிய சொத்துக்கள் எல்லாம் எனது தாயார் மஞ்சுளா பெயரில்தான் உள்ளது. எனது தந்தைக்கு எங்கெல்லாம் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்றெல்லாம் தெரியும். அந்த சொத்துக்கள் எதுவும் எங்களுக்கு தேவையில்லை. ஹரி டைரக்ஷனில் அருண் விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று எனது தந்தை வற்புறுத்தி வருகிறார். ஆனால் ஹரி ஏமாற்றி வருகிறார். இதற்காகத்தான் ஹரியின் கட்டுப்பாட்டில் எனது தந்தை இருக்கிறார்.
எனது மகன் விஜய் ஸ்ரீஹரி அமெரிக்காவில் பிறந்தவன். அவனுக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது. இதனால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க தூதரகத்திலும் முறையிட்டுள்ளேன். எனது தந்தைக்கு தமிழகத்தில்தான் செல்வாக்கு இருக்கிறது. ஆனால் நான் டெல்லி வரை எனது செல்வாக்கை காட்டுவேன்.
கடைசி ஆயுதம்…
போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், என்னிடம் கடைசியாக ஒரு ஆயுதம் இருக்கிறது. அந்த ஆயுதத்தை எடுத்தால் பலரும் நிலைகுலைந்து போவார்கள். குடும்ப ரகசியங்கள் என்ன என்பதை எனது தந்தையிடம் சண்டை போட்டபோது நான் கூறியிருக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்…”, என்றார்.
0 comments:
Post a Comment