நகைச்சுவை நடிகர் எம். எஸ். பாஸ்கரின் கார் விபத்தில் சிக்கியது. அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பட்டாபியாக நடித்து அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர் எம்.எஸ்.பாஸ்கர். தற்போது பெரியதிரையில் பல படங்களி்ல் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார். தனிக் காமெடியானாகவும் ஜொலித்து வருகிறார்.
தற்போது விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதுப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஊட்டியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் நேற்றிரவு 10 மணி அளவில் பொள்ளாச்சிக்குச் சென்றார்.
வழியில் அவரின் காரும், ஒரு ஆட்டோவும் பயங்கரமாக மோதின. இதில் கார் பலத்த சேதமடைந்தது. இருப்பினும் பாஸ்கர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
0 comments:
Post a Comment