Monday, November 29, 2010

விஜய்யின் காவலன்… தடையை விலக்கியது உயர்நீதிமன்றம்!

விஜய்-அசின் ஜோடியாக நடித்துள்ள காவலன் படத்துக்கு போடப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதி மன்றம்.

சித்திக் இயக்கியுள்ள காவலன் படம் அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், காவலன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை பெற்ற விநியோகஸ்தர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவும், படத்தை வெளியிடும் சினிமா பாரடைஸ் சக்தி சிதம்பரமும், விநியோகஸ்தரர் சரவணனுடன் பேச்சு வார்த்தை நடத்தி, கலர் லேப் ஒப்பந்தத்தை தருவதாக ஒப்புதல் அளித்தனர்.

அதற்கு சரவணனும் சம்மதம் தெரிவித்தார். பின்னர், இந்த தகவல் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து காவலன் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிபதி ராஜேஸ்வர் உத்தரவிட்டார்.

எனவே திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் காவலன் வெளியாகிறது.

அசின் நடித்துள்ளதால் இந்தப் படத்தை புறக்கணிக்குமாறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york