புதுமுக மலையாள நடிகையான அமலா பால் முன்னணி நடிகர்களுடன் வரிசையாக ஜோடி போட ஆரம்பித்துள்ளார்.
நடித்தது 3 படங்கள் என்றாலும், இப்போது வரிசை கட்டி படங்கள் அமலாவுக்காக காத்திருக்கிறதாம். அதிலும் முன்னணி நடிகர்களின் படங்களாக வர ஆரம்பித்துள்ளதாம். இதனால் குஷியாகியுள்ளார் அமலா.
சமீபத்தில் விக்ரமுடன் தெய்வமகன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்போது ஆர்யாவுடன் நடிக்கப் போகிறார். வேட்டை படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கிறாராம் அமலா. இதை இயக்கவிருப்பது லிங்குச்சாமி.
இது போக சிம்பு படத்திற்கும், தனுஷ் படத்திற்கும் கூட அமலாவை அணுகியுள்ளார்களாம்.
தமிழில் இப்படி வாய்ப்புகள் அதிகமாகி வருவதைப் போல மலையாளத்திலும் கூட நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம். இருந்தாலும் டப்பு அதிகம் உள்ள தமிழுக்கே அமலா முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.
விக்ரம், ஆர்யா பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதால் அமலாவின் போக்கிலும் மாறுதல் காணப்படுகிறதாம். அதாவது இனிமேல் முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே அவர் நடிக்கப் போகிறாராம். அதே போல சம்பளத்தையும் கூட கிடுகிடுவென உயர்த்தி விட்டாராம். சில லட்சங்களை மட்டுமே கடந்த சில படங்களில் வாங்கி வந்த அவர் தற்போது 5 விரல்களை விரித்துக் காட்டுகிறாராம்.
அம்மாடியோவ்!
0 comments:
Post a Comment