Monday, November 29, 2010

என் கணவர் மீதான வழக்கை விஜயக்குமார் வாபஸ் பெற்றால் சமரசம் பேசத் தயார் – வனிதா

என் கணவர் மீதான வழக்கை முதலில் விஜயக்குமார் வாபஸ் பெறட்டும். பிறகு சமரசம் குறித்து பேசலாம் என்று என்னிடம் சமரசம் பேசிய டிஐஜியிடம் கூறியுள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகை வனிதா.

விஜயக்குமார்- வனிதா விவகாரம் தற்போது அமைதியாகத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. போலீஸ் தரப்பில் மறைமுகமாக, விஜயக்குமார் சார்பில் வனிதாவிடம் சமரசம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இது வனிதாவின் பேட்டியிலிருந்து தெரிய வருகிறது.

விஜயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் படு வேகமாக வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் வனிதா கொடுத்த புகாரின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தனது தந்தை விஜயக்குமார், விஜயக்குமாரின் முதல் மனைவிக்குப் பிறந்த நடிகர் அருண் விஜய் ஆகியோர் மீது வனிதா புகார் கொடுத்துள்ளார். ஆனால் இருவரும் கைது செய்யப்படவில்லை.

இரு தரப்பும் மாறி மாறி புகார்களைக் கூறி வருகிறது. விஜயக்குமார் குடும்பத்தில் நடந்தவற்றை, நடப்பவற்றைக் கூறினால் அசிங்கமாகி விடும் என்கிறார் வனிதா. விஜயக்குமாரை வீழ்த்தும் கடைசி ஆயுதம் என்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மறுபக்கம், வனிதாவை எனது மகள் என்று கூறுவதற்கே வெட்கப்படுகிறேன் என்கிறார் விஜயக்குமார்.

இந்த நிலையில் வனிதா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், எனது தந்தை விஜயகுமார் வெளியில் இருந்து கொண்டே என்னைப்பற்றி அவதூறாக பேட்டி அளித்து வருகிறார். அருண்விஜய் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

போலீஸ் டி.ஐ.ஜி. ஒருவர் போனில் என்னுடன் அரைமணி நேரம் பேசினார். அப்போது அவர் விஜயகுமாருடன் சமாதானமாக போகும்படி கேட்டுக் கொண்டார்.

எனது கணவர் மீது பொய் புகார் கொடுத்து அவரை சிறையில் தள்ளி விட்டனர். இதனால் நானும், குழந்தைகளும் அடைந்த வேதனைக்கு அளவில்லை. தனது தவறை உணர்ந்து என் கணவர் மீதான வழக்கை விஜயகுமார் முதலில் வாபஸ் பெறட்டும். அதன் பிறகு சமாதானம் பற்றி பேசலாம் என்றார் அவர்.

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york