இன்று மூன்று முக்கியமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ரத்த சரித்திரம் இன்று வெளியாகியுள்ளது.
ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் இது. ரத்த சரித்திரத்தின் இரண்டாம் பாகம் மட்டுமே தமிழில் வெளியாகிறது. இதனால் முதல் பாகத்தின் முக்கிய காட்சிகளை வைத்து பத்து நிமிடங்கள் கதை சொல்லியிருக்கிறார்கள்.
புதுமுகங்கள் நடித்திருக்கும் தா படம் இன்று வெளியாகியுள்ளது. படம் பத்திரிகையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை ஸ்பெஷலாகப் பார்த்திருக்கிறார். சூர்ய பிரபாகர் என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.
மூன்றாவது ஆர்யா, ஸ்ரேயா நடித்திருக்கும் சிக்குபுக்கு. ரொமாண்டிக் காமெடியான இதனை மணிகண்டன் இயக்கியுள்ளார்.
இந்தப் படங்களின் ஆயுள்ரேகை என்ன என்பது நாளை மாலைக்குள் தெரிந்துவிடும்.
RSS Feed
Twitter
0 comments:
Post a Comment