Saturday, December 4, 2010

நந்தலாலா, கனிமொழி… ‘பெட்டிகளை எண்ணிக்கோங்க!’

சினிமா என்பது பொழுதுபோக்கு என்ற உண்மையை மறந்துவிட்டு, கலைஞர்கள் தங்கள் திருப்திக்காக எடுக்கும் சினிமாவுக்கு என்ன கதி நேருமோ, அது நந்தலாலாவுக்கும் நேர்ந்திருக்கிறது.

இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் சார்ந்த திரையரங்குகளிலிருந்து இந்தப் படம் இரண்டே நாட்களில் தூக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் அடுத்த வெள்ளிக்கிழமை வரை கூட படம் தாக்குப் பிடிக்கவில்லை.

நகர்புறங்களில் மிகச் சில திரையரங்குகள் மட்டுமே சுமாரான கூட்டத்துடன், இந்தப் படத்தை ஓட்டிக் கொண்டுள்ளன, அது கூட வரும் வெள்ளிக்கிழமை வரைதான்!

வெள்ளிக்கிழமை 3 புதிய படங்கள் ரிலீஸாவதால், நந்தலாலா தாக்குப்பிடிப்பது கஷ்டம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இந்தப் படமாவது பரவியில்லை.. கலெக்ஷன் போனாலும் கவுரவமாவது கிடைத்தது என ஆறுதல்பட்டுக் கொள்ளலாம் தயாரிப்பாளர்கள்.

ஆனால் கனிமொழி என்ற பெயரில் வெளியான ஒரு படம் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. வெளியான அத்தனை திரையரங்கிலும் பார்வையாளர்களைத் தேட வேண்டிய நிலை. இரண்டாம் நாளே இந்தப் படத்தின் பெட்டிகளைத் திருப்பி அனுப்பி, ‘எண்ணிக்கோங்க’ என வெறுப்பேற்றினார்களாம் தியேட்டர்காரர்கள்.

இதைவிடக் கொடுமை, இந்தப் படத்தை எடுக்க ரூ 5 கோடி செலவானது என அதன் இயக்குநரும் இன்னும் சிலரும் நடிகை சோனாவுக்கு கொடுத்திருக்கும் அல்வா!

சோனாவும் தயாரிப்பாளர் சங்கத்தில் கூட முறையிட்டுப் பார்த்துவிட்டாராம். ம்ஹூம்… சோனா சொல் அம்பலமேறவே இல்லை. ’2010′ பாக்யராஜ் படமாவது கைகொடுக்குமா என கவலையுடன் கேட்க ஆரம்பித்துள்ளார் சோனா.

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york