எனது படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள், என்னிடம் எதையும் எதிர்பார்த்து வர வேண்டாம் என்று நடிகர் ஜெய் அறிவுரை கூறியுள்ளார்.
சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் பெருமளவில் பேசப்பட்டவர் ஜெய். ஆனால் அதற்குப் பிறகு அவரது நடிப்பு எதிலுமே எடுபடவில்லை. இந்த நிலையில் தற்போது கனிமொழி படத்தில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகை சோனாதான் இதன் தயாரிப்பாளர்.
தற்போது படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஜெய் பிசியாக உள்ளார். பொள்ளாச்சியில் தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் தோன்றி கரகோஷங்களை அள்ளினார். நடிகை சோனாவும் இந்த உலாவின்போது உடன் இருந்தார்.
ரசிகர்களிடம் ஜெய் பேசுகையில்,
நான் நடித்து வெளிவந்துள்ள 8-வது படம் கனிமொழி. இந்த படத்தின் கதை யதார்த்தமானது. இந்த படத்தை கமர்சியல் படத்தின் எதிர்பார்ப்புடன் பார்க்க கூடாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் படத்தை பார்க்க வேண்டும்.
நண்பர்களுடன் சேர்ந்து நடித்த நாடோடிகள், கோவா, சென்னை-600018 உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பு பெற்று உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் நான் தனியாக நடித்த படங்கள் அந்த அளவு வெற்றிபெறவில்லை என்று கூறுகிறார்கள்.
நான் மட்டும் ஹீரோவாக நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு. வருங்காலங்களில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பேன்.
நடிகர்கள் பரத், ஜீவா போன்று நான் கமர்ஷியல் கதைகளில் நடிக்கவில்லை. விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் கமர்ஷியல் கதை கொண்ட ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். நல்ல கதைகள் இருந்தால் நடிகர் விஜய் உள்பட எந்த நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க தயார்.
எனது படங்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெய்.
நடிப்பையாவது எதிர்பார்க்கலாமில்ல…
0 comments:
Post a Comment