புகழ்பெற்ற கோவா திரைப்பட விழாவில் வசந்தபாலனின் அங்காடித் தெரு படம் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.
பொதுவாக சமூக அக்கறை கொண்ட அல்லது கலை சார்ந்த படங்கள் படைப்பாளிகளின் பாராட்டுக்களைப் பெறும்… வர்த்தக ரீதியில் தோற்றுவிடும். ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான அங்காடித்தெரு கலை ரீதியிலும் சரி, வர்த்தக ரீதியிலும் சரி… பெரும் வெற்றி பெற்றது.
புதுமுகம் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் 126 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்டவர்களின் பாராட்டையும் பெற்றது. ஐங்கரன் இன்டர் நேஷனலின் நிறுவனம் அதற்கு முன் கமர்ஷியல் படங்கள் சிலவற்றின் தோல்வியால் பட்ட நஷ்டத்தைக்கூட அங்காடித் தெரு சரிகட்டியது.
ஒவ்வொரு வருடமும் கோவாவில் நிகழும் இண்டர்நேஷனல் திரைப்பட விழா இந்திய திரையுலகை பொறுத்தவரை மிக மரியாதையானது, கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு நடந்த 41 வது சர்வதேச திரைப்பட விழாவில் அங்காடித் தெரு திரையிடப்பட்டு பல நாட்டு ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.
விழாவில் படத்தின் இயக்குநர் வசந்த பாலன் பங்கேற்றார்.
0 comments:
Post a Comment