என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்…இல்லாவிட்டால் செத்துப் போய்விடுவேன் என்று நடிகை அசினை மிரட்டியுள்ளார் ஒரு அடேங்கப்பா ரசிகர்!
தமிழ், இந்தியில் முன்னணி நடிகையான அசினுக்கு தினமும் ரசிகர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருகின்றனவாம். ஒரு ரசிகர் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகையையே பார்சலில் அனுப்பி, தன் அன்பைக் காட்டினார்.
இந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி ஒரு ரசிகர் கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘நீ என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்… இல்லாவிட்டால் நான் செத்துப் போய்விடுவேன்…’ என்று மிரட்டியுள்ளார்.
இன்னொரு பக்கம், அந்த ரசிகரின் தாயும் அசின் மேனேஜரிடம் தொடர்பு கொண்டு, ‘என் பையன் அசின் மேல பைத்தியமா இருக்கான். தினமும் காலையில் எழுந்ததும் எனது மகன் அசின் பெயரையே கூறிக் கொண்டு திரிகிறான்.. திருமணம் செய்து கொள்ளவும் பிரியப்படுகிறான்.
அவனுக்கு ஏதுனும் ஆகிவிடுமோ என்று பயப்படுகிறேன். அசின் ஒருமுறை என் மகனை சந்திக்க வேண்டும். எப்படியாவது எனது மகன் ஆசையை அசின் நிறை வேற்ற வேண்டும்…”, என்றெல்லாம் அந்த தாய் கெஞ்சியுள்ளார்.
ஆனாலும், இந்த ரசிகரின் கடிதத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளாததால், போலீசில் புகாரெல்லாம் தரவேண்டாம் என்று கூறிவிட்டாராம் அசின்.
0 comments:
Post a Comment