நடிகர் ஆர்யாவை விமர்சித்த பெப்ஸி தலைவர் விசி குகநாதனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது நடிகர் சங்கம்.
இது தொடர்பில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:
சென்னை, தியாகராயநகர் அரங்கில் நடந்த ‘உங்கள் விருப்பம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஆர்யாவை பற்றி பேசியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
ஆர்யா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர். தமிழ் ரசிகர்களை நம்பி வாழ்பவர். தமிழ் திரையுலக நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோருடன் நட்புணர்வுடனும், நன்றியுடனும் பழகுபவர். அப்படிப்பட்டவர், தமிழ் நடிகர்களை பற்றி இழிவாக பேசியதாக ஒரு கயிறு திரித்து, ஒரு புதிய பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கிறார் வி.சி.குகநாதன். இது சுத்தப் பொய். அவர் எங்கும் அப்படிப் பேசவில்லை.
தமிழ் உணர்வில், தமிழக மக்களின் நலனில் தென்னிந்திய நடிகர் சங்கமும், அதன் உறுப்பினர்களாக உள்ள நடிகர், நடிகைகள் கொண்ட அக்கறை பற்றி இந்த நாடு அறியும். தமிழக மக்கள் அறிவார்கள்.
தொடர்ந்து இதுபோல் பொறுப்பற்று பேசியும், அறிக்கையையும் விட்டுவரும் வி.சி.குகநாதனின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது…”
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment