என் படங்கள் அனைத்துமே மாஸ் ஆக்ஷன் படம்தான். அப்படின்னா நானும் ஒரு மாஸ் ஹீரோதானே, என்கிறார் கார்த்தி.
பருத்தி வீரனில் அறிமுகமான கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன், பையா மற்றும் நான் மகான் அல்ல படங்களுக்குப் பிறகு தமிழில் முக்கிய ஹீரோவாகிவிட்டார். இப்போது சொந்தக்காரர் தயாரிக்கும் சிறுத்தையில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் திருடன், போலீஸ் என இரு கெட்டப்களாம் அவருக்கு.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் காலேஜ் பையன் ரோல்களை மட்டுமே பண்ணிக்கொண்டிருக்க முடியாது. சிறுத்தையில் எனக்கு ப்ரமோஷன். இதில் நூற்றுக்கணக்கான ரவுடிகளைப் பந்தாடுகிறேன். இதற்காக நிஜ போலீஸ், நிஜ பிக்பாக்கெட்காரர்களிடம் பழகினேன்.
இதுபோன்ற பவர்புல் பாத்திரத்தில் நடிப்பது ரொம்ப உற்சாகமாக உள்ளது. பஞ்ச் டயலாக்குகளை முதல் முறையாகப் பேசுகிறேன். அப்படிப் பேசும்போதே, நானும் ஒரு மாஸ் ஹீரோதான் என்பதை உணர்கிறேன். ஆக்ஷன் கதைகளில் இனி அதிக கவனம் செலுத்தப் போகிறேன்,” என்றார்.
என்னமோ போங்க… இதே நெனப்புல ரசிகர்களை குத்தாம இருந்தா சரி!
0 comments:
Post a Comment