Saturday, December 4, 2010

தமிழில் நல்ல கதை இல்லே…! – ப்ரியாமணி அலட்டல்

தமிழில் வரும் படங்களில் நல்ல கதைகளே இல்லை. அதனாலேயே நான் தமிழில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளவில்லை, என்கிறார் ப்ரியாமணி.

தமிழ் சினிமாவையும் தமிழ் ரசிகர்களின் ரசனையையும் குறை சொல்வது இன்றைக்கு பேஷனாகிவிட்டது.

சமீபத்தில் மலையாளிகள் மத்தியில் தமிழரை கேவலமாகப் பேசி, அதற்கு வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் ஆர்யா. அவர் விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை.

இந்த நிலையில், பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரால் சினிமா வாழ்க்கை பெற்ற ப்ரியாமணி தன் பங்குக்கு தமிழ் சினிமாவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “தமிழ் சினிமாவில் நல்ல கதைகளே இல்லை. புதிதாக ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடமும் நல்ல கதை இல்லை. அதனால்தான் தமிழ்ப் படங்களை நான் ஒப்புக் கொள்வதில்லை.

முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன். தெலுங்குப் படங்களில் இந்த நிலை இல்லை”, என்று கூறியுள்ளார்.

இந்தப் பேட்டியைப் படித்ததும் கொந்தளித்த இளம் இயக்குநர் ஒருவர், “ஆர்யாவுக்கு குகநாதன் கொடுத்த ட்ரீட்மெண்ட்தான் இவருக்கும் சரியாக வரும் போலிருக்கிறது”, என்றார் கடுப்புடன்.

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york