Saturday, December 4, 2010

மன்மதன் அம்பு… ஓவியா உடைத்த ரகசியம்!!

அது என்ன மன்மதன் அம்பு… எந்த மாதிரி படம் இது… காதலா… சஸ்பென்ஸ் கலந்த நகைச்சுவையா அல்லது வயது வந்தவர்களுக்கான செக்ஸ் காமெடியா என ரசிகர்கள் பலரும் கேட்கும் அளவுக்கு படம் குறித்து எதுவுமே தெரியாத நிலை.

இந்தப் படத்தில் சில காட்சிகளில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள ஓவியாவோ, எல்லா சஸ்பென்ஸ்களையும் ஜஸ்ட் லைக் தட் சொல்லிவிட்டார்.

என்ன மாதிரி படம் இந்த மன்மதன் அம்பு…?

“மன்மதன் அம்பு’வில் ஒரு சில காட்சிகளில்தான் வருகிறேன். அந்தக் காட்சிகளில் எல்லாம் நகைச்சுவை தூக்கலாகவே உள்ளது. அந்தளவுக்கு அந்தக் காட்சிகள் வந்துள்ளன. இந்தப் படத்தின் கதை முழுக்க நகைச்சுவைதான். ‘பஞ்சதந்திரம்’, ‘தெனாலி’, ‘அவ்வை சண்முகி’ உள்ளிட்ட முந்தைய படங்களின் சாயலில் அமைந்திருக்கிறது…” என்றார்.

கவனிக்க, மூன்றுமே கமல்- ரவிக்குமார் படங்கள்தான். அப்போ.. மூன்று படங்களின் கலவையான கதையோ…!

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york