Saturday, December 4, 2010

வனிதாவை 3-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது! – உயர் நீதிமன்றம்

நடிகை வனிதாவை வரும் 3-ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

நடிகை வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயகுமாருக்குமான குடும்ப மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதில் வனிதா கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளி வந்துள்ளார். தந்தை விஜயகுமார், அம்மா மஞ்சுளா மற்றும் அண்ணன் அருண் விஜய்யை கைது செய்யக் கோரி டி.ஜி.பி., கமிஷனர் போன்றோரிடம் வனிதா நேரில் புகார் அளித்தார். விஜயகுமார் புகார் மீது தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன், கேட்டு உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி அக்பர்அலி முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகுமார் தரப்பில் ஆஜரான வக்கீல், நடிகை வனிதாவுக்கு முன்ஜாமீன் அளிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

வனிதாவுக்கு முன்ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் போலீசோ, வனிதா தலைமறைவாக இருப்பதாக தெரிவித்துவித்தனர்.

இதுகுறித்து வனிதாவிடம் கேட்டபோது, “விஜயகுமார் என்மேல் போலீசில் அளித்துள்ளது பொய்யான புகார். சட்டப்படி முன்ஜாமீன் கேட்டுள்ளேன். அவர் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார். மறைவாக இருந்து கொண்டு எனக்கு முன்ஜாமீன் அளிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

போலீஸ் தரப்பில் நான் தலைமறைவாக இருப்பதாகவும் என்னைக் கைது செய்ய தேடுவதாகவும் கூறியுள்ளனர். இது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஓடி ஒளியவில்லை. தலைமறைவாகவும் இல்லை. தினமும் போலீஸ் நிலையத்துக்கும் கமிஷனர் அலுவலகத்துக்கும்தான் அலைந்து கொண்டிருக்கிறேன்…”, என்றார்.

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york