சென்னை-28, சரோஜா, கோவா ஆகிய வெற்றிபடங்களை இயக்கிய வெங்கட் பிரபு, தயாநிதி அழகிரி தயாரிப்பில் அஜீத்தை வைத்து இயக்கி வரும் படம் மங்காத்தா. இதில் அஜீத் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
இது அஜீத்தின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு துவங்கி மும்மராம நடைபெற்று வருகிறது. படத்தின் ஓபனிங் சாங்கை பாங்காக்கில் முடித்து சென்னை திரும்பியுள்ளனர் படக்குழுவினர்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா 2011ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியிடவும், படத்தை மே-1 அஜீத் பிறந்தநாளில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment