அசின் நடித்த காவலன் படத்தைப் புறக்கணியுங்கள் என்று தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
சிங்கள பேரினவாத இன அழிப்புப் போருக்குப் பின் இலங்கை சென்ற அசின் அவ்வரசின் பிரச்சார ஊதுகுழலாகச் செயல்பட்டதும், திரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைச் சென்றதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று திமிர்த்தனமாகப் பேசி வருவதும் அனைவரும் அறிந்ததே.
தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை காயப்படுத்திய மலபார் சீமாட்டியின் படமான காவலனை புறக்கணிக்கும்படி ஈழ அமைப்புகளும், மே 17 போன்ற அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழக இயக்குனர்களும், நடிகர்களும், தயாரிப்பாளர்களும் அசினை புறக்கணிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை.
இதிலாவது நமது சொரணையை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.
0 comments:
Post a Comment